Saturday, September 12, 2009

அரசியும் குழப்பங்களும்

 நல்ல வேளை செல்வி தொடர் முடியும் போது(?) அரசியின் மகள்தான் செல்வி என்று இழுத்தார்களே. அது போல செல்லமே தொடர் முன்னோட்டம் காண்பித்த போது பயந்து போனேன். எங்கே அரசியின் பேத்தியை எல்லோரும் செல்லமே செல்லமே என்று கொஞ்சினார்களே. அரசியின் பேத்தியை வைத்து இன்னும் 600 எபிஸோட் செய்வார்களோ என்று. தாங்கமுடியாத குழப்ப வினாக்கள் இதோ
1)அரசி தந்த 100 கோடி சொத்தையும் விஸ்வ நாதன் தந்த 100 கோடி சொத்தையும் அனுபவிக்கும் செல்வி வீட்டில் ஒரு வேலையாள் கூடவா இல்லை.
2) அட ஒரு காவலாளி கூட பாதுகாப்புக்கு இல்லாமல் சரோஜினிக்கும் ஜீஜேவுக்கும் விஸ்வ நாதன் மூலம் மிரட்டல் இருந்தாலும் யார் வேண்டுமானாலும் நடு வீடு வரை வருவார்களாம்.யார் உயிருக்கு பாதுகாப்பு?
3)அரசி திருத்த நினைத்தவர்கள் வாழ்க்கை என்ன ஆனது?
4) நல்ல தம்பியும் விஸ்வ நாதனும் செத்துவிட்டால் மட்டும் போதுமா? அவர்களது வெளி நாட்டு தொடர்பு தீவிரவாதிகளை யார் அல்லது எப்படி பிடிப்பது?
5) கோலங்கள் தொடரில் இப்போது அதிகமாகவே மறைமுகமாக இலங்கை பிரச்சனையை தோழர் பாலகிருஷ்ணன் பேசுகிறார். எதில் போய் முடியுமோ?
6) அரசியின் மகனும் மகளும் எப்போது திருந்தின மாதிரி பேசுவார்கள்? எப்போது திட்டுவார்கள்? என்னவாயிற்று அவர்களது குடும்ப வாழ்க்கை? இன்னொரு மெகா தொடரில் எதிர்பார்க்கலாமா? அவர்களது குடும்ப பிரச்சினைகள் என்னவாயிற்று? சிரிங்க சிரிங்க சிரித்து கொண்டே இருங்க.

No comments:

Post a Comment